ரணில்- பசில் சந்திப்பு நாட்டின் எதிர்காலத்திற்கானது! சாகர காரியவசம்
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாட்டின் எதிர்காலத்திற்கானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர்களின் கலந்துரையாடலின் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல்களில் இருவரையும் தவிர வேறு எவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிவித்த அவர், தேவையானவற்றை மட்டும் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.