அணுவாயுத தடை குறித்த ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!
#SriLanka
#Ali Sabri
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
அணு ஆயுத தடை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த பிரேரணைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 20, 2021 ஆண்டு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, இம்மாதம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்துடன் இணைந்து நடைபெறவுள்ள விழாவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.