நாட்டில் புதிதாக மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு அங்கீகாரம்!
#SriLanka
#Sri Lanka President
#Health
#Hospital
#Medical
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago
நாட்டில் புதிதாக மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டில் இயங்கும் மருத்துவ பீடங்களின் தரத்திற்கு அமைவாகவே இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பீடங்களின் செயற்பாடுகள் அதனையும் தாண்டிய மட்டத்தில் பேணப்பட வேண்டும் என சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகவும், அந்த மருத்துவக் கல்லூரிகளில் மூன்று சுகாதார மண்டபங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது 13 மருத்துவ பீடங்கள் உள்ளதாகவும் அவற்றில் சுமார் 2000 மாணவர்கள் மாத்திரமே பயில்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.