அந்தமானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு
#India
#island
#Earthquake
#2023
#Tamilnews
#Breakingnews
Mani
1 year ago

அந்தமான் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் கடலில் இன்று அதிகாலை 03.39 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 93 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும் நிலநடுக்கம் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.



