ஜெய்ர் போல்சனாரோ வைத்தியசாலையில் அனுமதி!
#Hospital
#world_news
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ சாவ் பாலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது கத்தி குத்துக்கு உள்ளான அவர், இது தொடர்பான இரண்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் போல்சனாரோ ஆயத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சாவ் பாலோவில் உள்ள விலா நோவா ஸ்டார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2018 இல் இருந்து போல்சனாரோ குறைந்தது ஆறு அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.