சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

#SriLanka #Arrest #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 4.5 மில்லியன் சிகரெட்டுகளுடன் இருவரை சுங்க மத்திய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.  

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 110 மில்லியன் ரூபா என சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.  

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொள்கலன் ஒன்று  கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று (11.09) பிற்பகல் கொழும்பு கிராண்ட்பாஸ், கிரேலைன் கொள்கலன் முற்றத்தில் இந்த சிகரெட் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்திய சுங்கப் புலனாய்வுப் பிரிவினர் இலங்கையின் சுங்கப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.  

குறித்த கொள்கலன் கடந்த 7ஆம் திகதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த இறக்குமதியாளர் ஒருவர், கொள்கலனில் 100% பருத்தி துணி மற்றும் பிளாஸ்டிக் பொத்தான்கள் இருந்ததாக கூறியுள்ளார். இருப்பினும் குறித்த கொள்களனில் அப்படி ஒன்றும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!