நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட மனித கடத்தல் முகவர்!
#Lanka4
#sri lanka tamil news
#Nepal
Dhushanthini K
2 years ago

நேபாளத்தின் மனித கடத்தல் குழுவைச் சேர்ந்த ஒருவர் இலங்கைக்கு தனது முகவர்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது டெக்சாஸில் வசிக்கும் 52 வயதான ஹஸ்தா கௌதம், தனது வாடிக்கையாளர்களை பல்வேறு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 20 மில்லியன் ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக நேபாள பொலிஸ் மனித கடத்தல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர் 200 நேபாள பிரஜைகளை அமெரிக்காவிற்கு கடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் தற்போது பல்வேறு நாடுகளுக்கு தனது முகவர்களை அனுப்பியுள்ளதாகவும் அதில் இலங்கையும் ஒன்று எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



