கைப்பற்றிய வட்டாரங்களில் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்தது ரஷ்யா!
#War
#Lanka4
#sri lanka tamil news
#Russia Ukraine
Dhushanthini K
2 years ago

உக்ரேனில் ரஷ்யப் படையினர் கையகப்படுத்திய 4 வட்டாரங்களில் நடத்தப்பட்ட தேர்தலில் அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு ஆதரவான ஐக்கிய ரஷ்யக் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முழுமையான ராணுவக் கட்டுப்பாடு இல்லாதபோதும் உக்ரேனின் கிழக்கு, தெற்குப் பகுதிகளின் 4 வட்டாரங்களைத் தன்னோடு இணைத்துக்கொண்டதாக ரஷ்யா கடந்த ஆண்டு அறிவித்தது.
அங்குள்ள 70 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக மொஸ்கோ, வெளியிட்ட புள்ளிவிபர தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே தேர்தல் முடிவுகள் போலியானவை என்று உக்ரேனும் அதன் கூட்டணி நாடுகளும் தெரிவித்துள்ளன.
அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் ரஷ்யா முழுவதும் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படுகிறது.



