சிங்கப்பூரில் தனது மனைவியை கொலை செய்த இலங்கை பிரஜை கைது!
#world_news
#Lanka4
#Singapore
#sri lanka tamil news
Dhushanthini K
2 years ago

சிங்கப்பூரில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த ஈசன் தாரக கொட்டாகே என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து தனது மனைவியை கொலை செய்த குறித்த நபர் தாமாக முன்வந்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஹோட்டல் அறையை சோதனையிட்ட பொலிஸார் பெண்ணின் உடலை மீட்டுள்ளதுடன், கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் மீட்டுள்ளனர்.
இதன்பின்னர், காணொலி மூலமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகிய அவர், கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகயை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.



