மகாராஷ்டிராவில் லிஃப்ட் அறுந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
#India
#Death
#2023
#Tamilnews
#Breakingnews
#Died
#ImportantNews
#Mumbai
#Killed
Mani
1 year ago

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள பால்கம் பகுதியில் 40 மாடி கட்டிடம் ஒன்று சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது கட்டிடத்தின் மேற்கூரையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பணியை முடித்துக்கொண்டு தொழிலாளர்கள் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக லிப்ட் அறுந்து விழுந்தது. இதில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தற்போது விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



