பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை!

வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அம்பாந்தோட்டை மாவட்டம் உட்பட பல பிரதேசங்களில் அறுவடைக்கு அருகில் இருந்த பல வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன. 

இந்நிலையில் வறட்சி மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை மதிப்பிடுவதற்கான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்து அமரவீர தெரிவித்துள்ளார். 

இதனிடையே, உள்ளூர் உருளைக்கிழங்கின் கொள்முதல் விலை குறைந்ததால் தாம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உருளைக்கிழங்கு விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சந்தையில் தொடர்ந்தும் வெளியிடப்படுவதால் உள்ளூர் உருளைக்கிழங்கை கொள்வனவு செய்ய வர்த்தகர்கள் தயக்கம் காட்டுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!