யாழ்ப்பாணம் கொழும்பு அதிசொகுசு பேருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!
#SriLanka
#Jaffna
#Death
#Accident
#Hospital
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்தில் அதிசொகுசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்துபவரான எமில் ரவி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தையடுத்து அதிசொகுசு பேருந்தின் சாரதி, பேருந்தை அவ்விடத்தில் விட்டு தப்பித்து சென்ற நிலையில், அவ்விடத்தில் கூடியோர் குழப்பத்தில் ஈடுப்பட்டு பேருந்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார், விபத்து இடம்பெற்ற இடத்தில் கூடிய மக்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, உயிரிழந்தவரின் சடலத்தை பொலிஸார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.