மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம்
#SriLanka
#weather
#Rain
#Lanka4
Kanimoli
2 years ago

மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.



