சீருடையில் வலுக்கட்டாயமாக மதுபானம் எடுத்துச் சென்ற பொலிஸ் பரிசோதகருக்கு நேர்ந்த கதி
#SriLanka
#Batticaloa
#Police
Prathees
2 years ago
மட்டக்களப்பில் இரண்டு மதுபானசாலைகளில் இருந்து சீருடை அணிந்து இலவசமாக இரண்டு மதுபான போத்தல்களை எடுத்துச் சென்ற வாகரை பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் பரிசோதகர் விடுப்பு எடுத்துவிட்டு மீண்டும் பணியில் சேர வந்தபோது, மதுபான போத்தல்களை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் பின்னர் குறித்த பொலிஸ் பரிசோதகர் சுகயீனமுற்றுள்ளதாக வாகரையில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பொலிஸ் பரிசோதகர் வாகரை பொலிஸ் நிலையத்தில் சமூகப் பிரிவின் பொறுப்பாளராக உள்ளார்.