காட்டு யானை துரத்தியதில் வெளிநாட்டுப் பெண்ணொருவர் காயம்
#SriLanka
#Attack
#Elephant
Prathees
2 years ago
பானம வனப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் காட்டு யானைகளை பார்க்க சென்ற வெளிநாட்டினர் 8 பேரை காட்டு யானை துரத்தியுள்ளது.
இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தவறி விழுந்து கையில் காயம் அடைந்து அம்பாறை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வெளிநாட்டினர் யானைகளை படம் எடுக்கச் சென்றபோது யானை ஒன்று கலவரமடைந்து அவற்றைப் பின்தொடர்ந்து ஓடி வந்ததில் பயமடைந்த பெண் தவறி விழுந்து காயம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தில்இ அவரது கையில் மணிக்கட்டுக்கு கீழே காயம் ஏற்பட்டுள்ளது, ஆனால் அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.