இந்தியாவில் இடம்பெற்ற ஜி20 மாநாடு நிறைவு!
#India
#Meeting
#America
#Tamilnews
Mayoorikka
2 years ago
கடந்த 2 நாட்களாக இந்தியாவில் இடம்பெற்ற ஜி20 மாநாடு தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாட்டின் நிறைவில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் மாத பிற்பகுதியில் ஜி20 உச்சி மாநாட்டின் மெய்நிகர் அமர்வை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அடுத்த ஜி20 மாநாடு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ளதாக பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்ற இந்த மாநாட்டை போலவே ஆக்கபூர்வமான மாநாட்டை அடுத்த வருடம் தமது நாட்டிலும் நடத்த எதிர்ப்பார்த்திருப்பதாக பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா தெரிவித்துள்ளார்.