மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை பாரிய பிரச்சினை: சஜித்

#SriLanka #Student #Sajith Premadasa #drugs
Prathees
2 years ago
மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை பாரிய பிரச்சினை: சஜித்

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மற்றும் மது பாவனை அதிகரித்துள்ளமை பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் பாராளுமன்றத்திற்கு பாரிய பொறுப்பு உள்ளது எனவும் முதலில் பாராளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கும் இது தொடர்பில் உரிய முறையில் அறிவிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

 பாடசாலை மாணவர்களுக்கான பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் சிறுவர் மற்றும் பெண் உரிமைகள் உள்ளடக்கப்படுவதே பொருத்தமானதாகும் என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!