பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், பேருந்து கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயம்

#Death #Accident #people #Pakistan #2023 #Died #Punjab
Mani
2 years ago
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், பேருந்து கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயம்

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் மேரியமாபாத்தில் பிரபல தேசிய மரியன்னை கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த இடத்தில் நடைபெறும் மதக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமானோர் பேருந்து மூலம் வந்தனர்.

பேருந்து ஷெய்குபுராவில் உள்ள கன்கா டோக்ரான் என்ற இடத்தில் பேருந்து வந்தபோது, ​​திடீரென கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐம்பது பேர் காயம் அடைந்தனர்.

பேருந்தில் கூட்டம் அதிகமாகவும், வளைவில் ஓட்டுநர் அதிவேகமாக சென்றதே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!