மைத்திரியுடன் ஒப்பந்தம் இல்லை: சமகி ஜனபலவேக தீர்மானம்
#SriLanka
#Maithripala Sirisena
#srilanka freedom party
Prathees
2 years ago
எதிர்வரும் தேர்தலில் எந்த வகையிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது அவர் தலைமையிலான கட்சியுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என சமகி ஜனபலவேக தீர்மானித்துள்ளது.
சிறிசேனவின் அரசியல் கொள்கைகள் மற்றும் அவரது நடைமுறைகளை கருத்தில் கொண்டு சமகி ஜனபலவேக இந்த முடிவை எடுத்ததாக சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மைத்திரிபால சிறிசேன மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் பாரதூரமானவை என்பதால், அவருடன் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பொதுமக்களின் கருத்து என மேற்கண்ட சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.