இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
#world_news
#Earthquake
#Lanka4
#sri lanka tamil news
Dhushanthini K
2 years ago

இந்தோனேசியாவின் சுலவேசி தீவுப்பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று நேற்று (09.09) பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுக்கோளில் 6.0 ஆக குறித்த நிலநடுக்கம் பதிவாகியதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் சாத்தியமான பின்அதிர்வுகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு முன்னதாக குறித்த பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



