சனல் -04 காணொலி : பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது!

#SriLanka #Easter Sunday Attack #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
சனல் -04 காணொலி : பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது!

சனல் 4 காணொளி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் பிதா ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

சனல் -04 வெளியிட்ட காணொலி தொடர்பில் நேற்று (09.09) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதன்படி இந்த தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதா, அல்லது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் முரண்பாடு காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வெளிப்படையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!