உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை நீடிக்க நடவடிக்கை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை மேலும் 04 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட சரக்கு வரி எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் அடுத்த 4 மாதங்களுக்கு அமுற்படுத்தப்படவுள்ளது.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கிற்கு 50 ரூபாய் விசேட சரக்கு வரியை இந்த வருடம் மார்ச் மாதம் முதல் அமுற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.