சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!
#SriLanka
#China
#Export
#Tea
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago
சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியினை பெறும் நாடுகளில், சீனாவிற்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய தேயிலை கலவையில் தனித்துவத்தை இலங்கை தொடர்ந்து பேணுவதனால் சர்வதேச சந்தையில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.
மேலும் ஒரு கிலோ கிராம் இந்திய தேயிலையின் ஏற்றுமதி கட்டணம் 3.58 அமெரிக்க டொலர்களாகவும், கென்யாவின் ஏற்றுமதி கட்டணம் 2.60 அமெரிக்க டொலர்களாக உள்ள நிலையில், இலங்கை தேயிலையின் சராசரி கட்டணம் 5.10 உள்ளமை குறிப்பிடத்தக்கது.