திருகோணமலை - இலுப்பைக்குளம் பகுதியில் நாட்டப்பட்ட பதாகையால் பரபரப்பு!

#SriLanka #Trincomalee #Lanka4 #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
திருகோணமலை - இலுப்பைக்குளம் பகுதியில் நாட்டப்பட்ட பதாகையால் பரபரப்பு!

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பௌத்த விகாரைக்கான பதாகை வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பதாகையானது இன்று (09.09) சில பௌத்த பிக்குகளால் வைக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இதன்படி பொரலுகந்த ரஜமஹாவிகாரை எனப் பெயர் பொறிக்கப்பட்ட பதாகையொன்று குறித்த பகுதியில் நாட்டப்பட்டுள்ளதுடன், இதற்கு சில பொலிஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!