பிரதமரைச் சந்தித்த சீன தொழில் அதிபர்கள் குழு

#SriLanka #China #Dinesh Gunawardena
Prathees
2 years ago
பிரதமரைச் சந்தித்த  சீன தொழில் அதிபர்கள் குழு

நாட்டின் கடற்றொழில் துறையில் சாத்தியமான முதலீடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சீன தொழில் அதிபர்கள் குழுவொன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்துள்ளது.

 மீன் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி முதலீடுகள் சீனாவுக்கு மட்டுமின்றி ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு சந்தைகளுக்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் கூறினார்.

 குழுவிற்கு தலைமை தாங்கிய புஜியான் மாகாணத்தின் நீர்வாழ் பொருட்கள் மொத்த விற்பனை தொழில் சங்கத்தின் தலைவர் யூசு ஹுவாங் கூறுகையில், 

சீனாவில் மீன் பொருட்கள் ஏற்றுமதியில் சங்கம் முன்னணியில் உள்ளது. நாட்டில் உள்ள கடலோர துறைமுகத்திற்கு அருகில் மீன் பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்காக பெரிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைக்க வாய்ப்பு உள்ளது.

 சீன முதலீட்டாளர்கள் மீன்பிடிக்க நவீன பல நாள் மீன்பிடி கப்பல்களையும், மீன் பதப்படுத்துதலுக்கு நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வருவதாக சங்கத்தின் செயலாளர் Huang Jincheng குறிப்பிட்டார்.

 இந்நிகழ்வில் கலந்து கொண்ட கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு.பியால் நிஷாந்த, மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைப்பதற்கு சீன கைத்தொழில்துறையினருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

 இலங்கையில் சிறிய மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு புஜியான் மாகாணத்தின் நீர்வாழ் உற்பத்திப் பொருட்கள் மொத்தக் கைத்தொழில் சங்கத்திடம் பிரதமர் கேட்டுக்கொண்டதுடன், சீனக் குழுவும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!