சந்திரிகாவிற்கு சுதந்திரக் கட்சியில் அதியுயர் பொறுப்பு
#SriLanka
#Chandrika Kumaratunga
#srilanka freedom party
Prathees
2 years ago
முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதியுயர் அரசியல் பொறுப்பு வழங்கப்பட வேண்டுமென கட்சியின் சிரேஷ்டர்களால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த யோசனைக்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.