துபாயில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம் !
#India
#Flight
#Airport
#Delhi
#people
#Emergancy
Mani
2 years ago

துபாயில் இருந்து சீனாவின் குவாங்சூ நகருக்கு எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் டெல்லிக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பயணி ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அந்த பயணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விமான நிறுவனம் இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



