கிளிநொச்சியில் தும்புத் தொழிற்சாலையில் தீவிபத்து!

#SriLanka #Lanka4 #fire #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கிளிநொச்சியில் தும்புத் தொழிற்சாலையில் தீவிபத்து!

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகாவில் சக்தி அக்றோ தும்புத் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.  

குறித்த சம்பவம் நேற்று (08.09) நண்பகல் வேளை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தும்புத் தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ளதுடன் தொழிற்சாலை வளாகத்திலுள்ள தென்னை மரங்களும் அருகிலுள்ள காணிகளில் உள்ள தென்னை மரங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.  

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர்,  கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர்,  இராணுவத்தினர்,  கிராம சேவகர்,  கிராம மக்கள் ஆகியோரின் துணையுடன் தற்காலிகமாக குறித்த தீ அனர்த்தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

தீவிபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில்  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

images/content-image/1694235284.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!