மொரோக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 300 பேர் பலி!

#world_news #Earthquake #Lanka4 #Tamilnews
Dhushanthini K
2 years ago
மொரோக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 300 பேர் பலி!

மொரோக்கோவில் நேற்று (08.09) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஏறக்குறைய 300 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மொரோக்கோவின்   ஹை அட்லஸ் மலைத்தொடர்  பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலடுக்கம் பதிவாகியுள்ளது. 

பிரபலமான சுற்றுலாத் தலமான மராகேச்சில் இருந்து தென்மேற்கே 72 கிலோமீட்டர்கள் (44.7 மைல்) மையத்தில் மையம் கொண்டிருந்த குறித்த நிலநடுக்கத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 296 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 153 பேர் காயமடைந்துள்ளதாகவும்  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறித்த பகுதியில் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்த நிலையில், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேநேரம் மீட்பு பணிகளும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!