கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய கலந்துரையாடல்!
#SriLanka
#IMF
#Tamilnews
#sri lanka tamil news
#money
#World Bank
Mayoorikka
2 years ago
இலங்கை போன்ற நாடுகளின் கடன் மறுசீரமைப்புத் திட்டங்களில் உள்நாட்டுக் கடனை உள்ளடக்குவது குறித்து ஆராய்வதற்காக அடுத்த வாரம் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், உலக வங்கியின் பிரதிநிதிகள், G20 குழு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் உலகின் முக்கிய பொருளாதாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்த வட்டமேசை விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.