வைசாலி கை அகற்றப்பட்ட சம்பவம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை
#Douglas Devananda
#Jaffna
#Hospital
#sri lanka tamil news
#Girl
#Surgery
Prasu
2 years ago
யாழ்.போதனா வைத்திய சாலையில் எட்டு வயதுச் சிறுமி ஒருவரின் கை உரிய முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்படாமையினால் அகற்றப்பட்ட. சம்பவம் மிகுந்த மன வேதனையையும்,வைத்தியசாலையின் செயற்பாடுகளில் பாரிய நம்பிக்கையீனத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
பல லட்சம் மக்களுக்கு வைத்திய சேவையை வழங்குகின்ற பொறுப்பு வாய்ந்த இவ் வைத்தியசாலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது மிகுந்த அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
ஆகவே குறித்த விடயம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தி உண்மைகள் வெளிக்கொணரவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது பெற்றோருக்கும் நியாயம் கிடைக்கப்பட்ட வேண்டும் என்பதற்காக விசேட அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்