சீனாவின் புதிய வரைபடத்துக்கு ஜப்பானும் எதிர்ப்பு

#China #world_news #Japan #Warning #Tamilnews
Prasu
2 years ago
சீனாவின் புதிய வரைபடத்துக்கு ஜப்பானும் எதிர்ப்பு

சீனா சமீபத்தில் தனது நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது. அதில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் இணைந்து வரை படம் இருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

அதே போல் சீனா தனது வரைபடத்தில் தென் சீன கடல் பகுதிகள் சிலவற்றையும் இணைத்தது. இதற்கு பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் சீனாவின் புதிய வரைபடத்துக்கு ஜப்பானும் எதிர்ப்பு தெரித்து உள்ளது. ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள சென்காகு தீவுகள் சீனா வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அவை சீனப் பெயரான டியாயு தீவுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து ஜப்பான் அரசின் தலைமை செயலாளர் ஹிரோகாசு மட்கனோ கூறும்போது, ஜப்பானுக்கு சொந்தமான சென்காகு தீவை சீனா தனது வரை படத்தில் இணைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். 

அந்த வரை படத்தை திரும்ப பெற வலிறுத்தி உள்ளோம். வரலாற்று ரீதியாக சர்வதேச சட்டத்தின் கீழும் சென்காகு தீவுகள் ஜப்பானுக்கு சொந்தமானது. 

இவ்விவகாரத்தில் அமைதியாக மற்றும் உறுதியான வழியில் ஜப்பான் பதிலளிக்கும் என்றார். ஆனால் ஜப்பானின் எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று சீனா அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!