சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை!

#India #Tamil People #today #HeavyRain #2023 #Tamilnews #Chennai
Mani
2 years ago
சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் என நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்து இருக்கிறது.

இதோடு திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமாரி என 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!