ஐஸ் போதைப் பொருளைப் பெற்றுக் கொண்டு சந்தேக நபரை விடுவித்த இரு பொலிஸார் கைது
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து சந்தேகநபருக்கு சொந்தமான ஐஸ் போதைப்பொருள், ஆப்பிள் வகை தொலைபேசி மற்றும் இருபத்தைந்தாயிரம் ரூபா ன்பவற்றை பெற்றுக் கொண்டு சந்தேக நபரை விடுவித்ததாக கூறப்படும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களை கைது செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் கெசல்வத்தை பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர், மற்றைய கான்ஸ்டபிள் கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றுகின்றார். வெலிக்கடை ராஜகிரிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்த போதைப்பொருள், பணம் மற்றும் தொலைபேசி என்பவற்றை இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் எடுத்துச் சென்று சந்தேக நபரை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெசல்வத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் நீதவான் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி இரவு சிவில் உடையில் ராஜகிரியவுக்குச் சென்று இந்தச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் சந்தேகநபர் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இருவரும் அண்மையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கோட்டை பொலிஸில் கடமையாற்றும் கான்ஸ்டபிளும் சுமார் இரண்டு மாதங்களாக கெசல்வத்த பொலிஸில் கடமையாற்றியுள்ளார்.
இவரின் நடவடிக்கைகள் தமக்கு பிடிக்காத காரணத்தினால் அவரை கோட்டை பொலிஸாருக்கு இடமாற்றம் செய்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.