அகழ்வு பணியானது நாளையும் தொடரும் - சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா
#SriLanka
#Police
#Kilinochchi
#Investigation
#Lanka4
Kanimoli
2 years ago
தொல்பொருள் பிரிவினால் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அகழ்வு பணியானது நாளையும் தொடரும் என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இன்றையதினம் இடம்பெற்று நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார், அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இன்று (06.09.2023) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
ஏற்கனவே தோண்டப்பட்ட புதை குழியிலுள்ள மண் வெளியே எடுக்கப்பட்ட நிலையில் முக்கியமாக தொல்பொருள் பிரிவினால் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப் பணியானது நாளையும் தொடரும்.
இது சம்பந்தமான விபரங்கள் ஊடகங்களுக்கு தினந்தோறும் அறியத்தரப்படும் என மேலும் தெரிவித்தார்.