ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
#India
#GunShoot
#Tamilnews
#Breakingnews
#IndianArmy
#ImportantNews
#Killed
Mani
2 years ago

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லைக்குள் 2 பயங்கரவாதிகள் நுழைய முயன்றனர். பயங்கரவாதிகள் நுழைவதை கண்ட ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.



