ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
#India
#PrimeMinister
#School
#Meeting
#Delhi
#Minister
#2023
#School Student
#College Student
#ImportantNews
Mani
2 years ago

டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதனால் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில், ஜி20 மாநாட்டையொட்டி டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, டெல்லி முழுவதும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செப்டம்பர் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



