கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவிற்கு விளக்குமறியல்!
#SriLanka
#Court Order
#Lanka4
Thamilini
2 years ago
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்குமறியளில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சசித்ர சேனாநாயக்க தொடர்பான வழக்கு இன்று (06.09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதவான் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக்கில் ஆட்ட நிர்ணயம் செய்தமை தொடர்பில் சச்சித்ர சேனாநாயக்க விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வு பிரிவில் (SIU) சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.