ஈஸ்டர் தாக்குதல் காணொலி : நாட்டு மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும்!
#SriLanka
#Easter Sunday Attack
#Lanka4
Thamilini
2 years ago
பிரித்தானிய ஊடகமான செனல்-04 வெளியிட்டுள்ள காணொலியை நாட்டு மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேற்படி வலியுறுத்தியுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், உயிர்த்த ஞாயிறு தாக்தல்கள் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் காணொலியை பார்த்தவுடன் ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய முக்கியமான ஆவணப்படம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தான் நெடுங்காலமாக இந்த தாக்குதலுக்கும், கோட்டாபயராஜபக்ஷவிற்கும் தொடர்பிருக்கும் என கருதியதாகவும் தெரிவித்துள்ளார்.