உத்தரபிரதேசம் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

#Accident #people #2023 #fire #ImportantNews #Factory
Mani
2 years ago
உத்தரபிரதேசம் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து எற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து தொழிற்சாலையின் பொருட்களை சேகரித்து வைக்கும் குடோனில் எற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் 10 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் தொழிற்சாலையைச் சுற்றி வளைத்து, தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர். தீ விபத்து எற்பட்டது அதிகாலை நேரம் என்பதால் தொழிலாளர்கள் யாரும் விபத்தில் சிக்கவில்லை.

உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, இருப்பினும், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது, மேலும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தற்போது விசாரணை நடந்து வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!