லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது - சஜித்!

#SriLanka #Sajith Premadasa #Lanka4
Thamilini
2 years ago
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது - சஜித்!

தற்போதைய ஜனாதிபதியின் அரசியல் பயணத்தில் பெரும் பக்கபலமாக இருந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்றைய (06.09) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  லசந்த விக்கிரமதுங்கவை கொன்ற கொலையாளிகள் யாரேனும் பாராளுமன்றத்தில் இருந்தால் அந்த நபர்களின் பெயர்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

அத்துடன் இது தொடர்பாக கேள்வி எழுப்ப தாம் ஒருபோதும் பயப்படவில்லை எனக் கூறிய அவர்,  இந்த விடயத்தில் உரிய நீதி கிட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!