வாக்னர் குழுவிற்கு தடை விதிக்கும் பிரித்தானியா!
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

வாக்னர் குழுவினரை பயங்கரவாத அமைப்பாக கருதி தடை செய்வதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் சட்ட விதிகளின் பிரகாரம் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பயங்கரவாதச் சட்டம் 2000ன் கீழ் குறித்த அமைப்பை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல்களை பிரித்தானிய உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார்.
வாக்னர் அமைப்பானது அழிவுகரமான அமைப்பு எனவும், வாக்னரின் தொடர்ச்சியான ஸ்திரமின்மை நடவடிக்கைகள் கிரெம்ளினின் அரசியல் இலக்குகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



