கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் : வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா!

#world_news #NorthKorea #Lanka4
Dhushanthini K
2 years ago
கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் : வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா!

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.  

வடகொரிய தலைவர் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு இம் மாதத்தின் இறுதி பகுதியில் நடைபெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில்  ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என  வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

சர்வதேச சமூகத்தில் இதற்கான விலையை அவர்கள் கொடுப்பார்கள் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் செய்தியாளர்களிடம் கூறினார். 

எவ்வாறாயினும்கிம் ஜோங் உன் வருகை தொடர்பில் அமெரிக்காவின் கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை என ரஷ்யா பதிலளித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!