15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞன் கைது
#SriLanka
#Arrest
#Abuse
Prathees
2 years ago
ஜயா ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பலோகம பொலிஸ் பிரிவில் வசிக்கும் சிறுமி, சந்தேக நபருடன் காதல் உறவை பேணி வந்ததாகவும், அதற்கு இரு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பெற்றோர்களுக்கும் தெரியாமல் இருவரும் பலமுறை ரகசியமாக சந்தித்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம் ஜெயா ஆற்றில் நீராடச் சென்ற போது சந்தேகநபரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமியின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
முறைப்பாடு தொடர்பில் இப்பலோகம காவற்துறை அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.