எலான் மஸ்க் கொல்லப்படலாம்! - தந்தை அச்சம்!

#world_news #ElonMusk #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
எலான் மஸ்க் கொல்லப்படலாம்! - தந்தை அச்சம்!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் படுகொலை செய்யப்படலாம் என அவரது தந்தை எரோல் மஸ்க் அச்சம் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா மின்சார கார், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம், ஸ்டார்லிங்க் இணைய சேவை உட்பட பல்வேறு நிறுவனங்களை தொடங்கி நிர்வகித்து வரும் அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க், குறித்து தி நியூ யார்க்கர் பத்திரிகை வெளியிட்டுள்ள சிறப்பு கட்டுரையில் விண்வெளி, மின்சார வாகனம், சமூக ஊடகம் போன்றவை தொடர்பாக அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளில் மஸ்க் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க், ட்விட்டரை கையகப்படுத்திய பிறகே உலக அரங்கில் தமக்கு முக்கியத்துவம் கிடைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் கூறியது குறித்தும், கடந்த ஆண்டு மே மாதம் உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்கிய போது ரஷ்யாவிடமிருந்து வந்த மிரட்டல் குறித்தும், கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரை குறித்து பேசியுள்ள எலான் மஸ்கின் தந்தை, தனது மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!