முத்துராஜாவிற்கு சுகவீனம் : தாய்லாந்து விரைந்த வைத்திய குழுவினர்
#SriLanka
#doctor
#National Zoo
#Elephant
#Thailand
Mayoorikka
2 years ago
சுகயீனம் காரணமாக தாய்லாந்து திரும்பிய முத்துராஜா ஹஸ்தியாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இலங்கை மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் கால்நடை சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சந்தன ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (5) தாய்லாந்து சென்றுள்ளனர்.
இந்தக் குழுவில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் முத்துராஜா யானைக்கு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர் திருமதி மதுஷா பெரேரா மற்றும் சிரேஷ்ட விலங்கு காப்பாளர் நந்துன் அனலமுதலி ஆகியோர் அடங்குவர்.
தாய்லாந்து அரசின் அழைப்பின் பேரில் இந்தக் குழு அனுப்பப்பட்டதாக உயிரியல் பூங்காத் துறை தெரிவித்துள்ளது.