கருங்கடல் தானிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது - புட்டின் திட்டவட்டம்!

#world_news #Russia #War #Lanka4 #Putin
Thamilini
2 years ago
கருங்கடல் தானிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது - புட்டின் திட்டவட்டம்!

தங்களது வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை மேற்கத்திய நாடுகள் அனுமதிக்காத வரை, உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் மீண்டும் அமல்படுத்தப்படாது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.  

உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து கருங்கடல் வழியாக தானியங்களைக் கொண்டு செல்வதற்கான அந்த ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக ரஷியா கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. 

இது குறித்து துருக்கி அதிபா் எா்டோகனுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு விளாதிமீா் புதின் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனுடன் தானிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது, ரஷியாவிலிருந்து உணவுப் பொருள்கள், உரம் ஆகியவற்றை உலகின் பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு அனுமதிப்பதாக உறுதியளிக்கப்பட்டது.  

ஆனால், அந்த உறுதிமொழியை மேற்கத்திய நாடுகள் நிறைவேற்றவில்லை. இதன் காரணமாகவே அந்த ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்திவைத்தோம். தாங்கள் கூறியபடி ரஷ்ய வேளாண் பொருள்களின் ஏற்றுமதிக்கு மேற்கத்திய நாடுகள் அனுமதி அளிக்காத வரை தானிய ஒப்பந்தம் மீண்டும் அமல்படுத்தப்படாது. 

அத்தகைய ஏற்றுமதிக்கு மேற்கத்திய நாடுகள் வழிவகை செய்தால் அடுத்த சில நாள்களிலேயே ரஷிய-உக்ரைன் தானிய ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் ” எனக் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!