இலங்கைக்கு 300 மில்லியன் டொலர்களை வழங்கும் ஐ.நா சபை!

#SriLanka #UN #Lanka4
Thamilini
2 years ago
இலங்கைக்கு 300 மில்லியன் டொலர்களை வழங்கும் ஐ.நா சபை!

இலங்கைக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்காக 300 மில்லியன் டொலர்களை வழங்க ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்ப்பதாக இலங்கையில் உள்ள ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் மஹிந்த  யாப்பா அபேவர்தனவிற்கும், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள  Marc-André Francheஇற்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  இலஞ்ச ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதற்கும், பாராளுமன்ற வரவு செலவு அலுவலகம் நிறுவப்பட்டதற்கும் இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்தார்.  

அடுத்த 5 ஆண்டுகளுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கு புதிய ஒத்துழைப்பு கட்டமைப்பின் மூலம் ஐக்கிய நாடுகள் சபை 300 மில்லியன் டொலர்களை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

இலங்கை பாராளுமன்றத்தின் அபிவிருத்தி பங்காளியாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கு (UNDP) தொடர்ச்சியான ஆதரவு வழங்குவதற்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.  

மேலும், இலங்கையின் சட்டவாக்க செயல்முறை, தேர்தல் முறை, சமாதானத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் மற்றும் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!