பெறுபேறுகளின் மீளாய்வுக்காக செப்டெம்பர் 07 முதல் 16 வரை விண்ணப்பிக்க முடியும்
#SriLanka
#Susil Premajayantha
#Ministry of Education
#Examination
Kanimoli
2 years ago
2022 க.பொ.த. உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகள் இன்று (04) வெளியிடப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.எம். அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
www.doenets.Ik அல்லது www.results.exams.gov.lk ஆகிய இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பெறுபேறுகளைப் பெற முடியும்.
அத்துடன், 2022 க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 166,938 ஆகும். உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 84 பரீட்சார்த்திகளின் பெறுபேறு இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்க, செப்டெம்பர் 07 முதல் 16 வரை http://onlineexams.gov.lk/eic இணைப்பு மூலம் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.