இவ்வருடத்தில் மாத்திரம் 02 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
இவ்வருடத்தில் மாத்திரம் 02 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்!

2023 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 200,387 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களில்  113,635 ஆண் தொழிலாளர்களும், 86,752  பெண் தொழிலாளர்களும் உள்ளடங்குகின்றனர். 

பெரும்பாலான இலங்கையர்கள் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.  இரண்டாவதாக, குவைத்திற்கும், மூன்றாவதாக கட்டாருக்கும் நான்காவதாக ஐக்கிய இராச்சியத்திற்கும் தொழிலுக்காக சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை 47,796 பேர் மாத்திரமே வீட்டு பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு வெளியேறியுள்ளனர். மாவட்டங்களைப் பொறுத்தமட்டில், கொழும்பு மாவட்டத்திலிருந்து பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!